மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் கால்நடை சந்தையில் ஆடு, கோழி விற்பனை களைகட்டின.
இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன. 10 கிலோ எடை கொண்ட ஆட்டுகுட்டி 13 ஆயிரம் ரூபாய் வரையும், 2 கிலோ எடையுள்ள சேவல் 450 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டது.
சிவராத்திரி விழாவின்போது கிடா, சேவல் அதிகளவில் பலியிடப்படும் என்பதால் அவற்றின் விலை அதிகரித்துள்ளது.