இந்தி எழுத்துகளை அழிப்பவர்கள் குறுகிய மனப்பான்மையுடன் செயல்படுவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர், தன் வீட்டு குழந்தைகளை ஹிந்தி படிக்க வைத்து விட்டு 1960 இல் நடந்தது போல் ஹிந்தி எதிர்ப்பை கொண்டு வருவதாக தெரிவித்தார்.
வெளிமாநிலத்தவர் தமிழகம் வந்தால் எப்படி ஊர் பெயர்களை புரிந்து கொள்வார்கள் என்றும் தமிழிசை கேள்வி எபப்பினார்.
திருப்பரங்குன்றம் செல்வேன் என தெரிவித்த செல்வபெருந்ததை மு க ஸ்டாலின் செல்ல வேண்டாம் என கூறியதும தனது பயணத்தை ரத்து செய்து விட்டதாக அவர் கூறினார்.
செல்வ பெருந்தகையின் தலைவர் ஸ்டாலினா? சோனியா காந்தியா? என்ற சந்தேகம் அவர்களின் கட்சி தொண்டர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தமிழிசை சௌந்தரராஜன் வினவினார்.