ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் கோயிலுக்கு நடந்துசென்ற பக்தர்களை காட்டு யானைகள் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
சிவராத்திரியை முன்னிட்டு குண்டலகோனாவில் உள்ள சிவன் கோயிலுக்கு பக்தர்கள் வனப்பகுதி வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது காட்டுயானை கும்பல் திடீரென பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் தினேஷ், மன்னம்மா, திருப்பதி ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.