உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கி 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து பாரிசில் உள்ள ஈபிள் டவர் உக்ரைன் கொடியின் வண்ணத்தில் ஒளிர்ந்தது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் – ரஷ்யா இடையே, 2014 முதல் மோதல் நிலவி வந்த நிலையில், 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலை தொடங்கியது.
உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கி மூன்றாம் ஆண்டு நிறைவடைந்ததையொட்டி பல்வேறு உலக தலைவர்கள் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஈபிள் டவர் உக்ரைன் கொடி வண்ணத்தில் ஒளிர்ந்து.