சேலம் மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர் ஒருவர் மைக்கை வீசி எறிந்துவிட்டு ஆவேசமாக வெளியேறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
சேலம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திமுக கவுன்சிலர் குணசேகரன், தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் புதிதாக கட்டப்பட்ட சுகாதார நிலையங்கள் தற்போது வரை பயன்பாட்டுக்கு வரவில்லை என புகார் தெரிவித்தார்.
ஏன் எங்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்துகிறீர்கள் என மேயரை நோக்கி அவேசமாக கேள்வி எழுப்பிய திமுக கவுன்சிலர், கையில் இருந்த மைக்கை கீழே வீசினார்.
தொடர்ந்து மேயர், துணை மேயரிடம் கும்பிடு போட்டுவிட்டு கூட்டத்தில் இருந்து அவர் வெளியேறிய நிலையில், மூத்த திமுக உறுப்பினரும், கவுன்சிலருமான கலையமுதனும் கூட்டத்தில் இருந்து ஆவேசத்துடன் வெளியேறினார்.