காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே பிரசவசத்தின் போது உயிரிழந்த இருளர் இனப் பெண்ணின் உடல், தற்காலிக டெண்ட் பகுதியிலேயே வைக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடோடிகளாக ஊர் ஊராக சென்று மரம் அறுக்கும் தொழில் செய்யும் இருளர் பழங்குடியின மக்களில் சிலர் உத்திரமேரூர் அருகே தற்காலிக டெண்ட் அமைத்து தங்கி இருந்தனர். இவர்களில், செல்வி என்ற பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது.
பிரசவத்தில் செல்வி இறந்த நிலையில், உயிருடன் இருந்த குழந்தையை, சுகாதாரத்துறையினர் மீட்டு கலியாம்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், செல்வியின் உடலை அவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவில்லை.
தற்காலிக டெண்ட் உள்ளேயே உயிரிழந்த பெண்ணின் உடல் வைக்கப்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.