டெல்லி சட்டப்பேரவையில் இருந்து அதிஷி உள்பட 21 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை வரும் 28-ம் தேதி வரை இடைநீக்கம் செய்து சபாநாயகர் விஜயேந்தர் குப்தா உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கின் புகைப்படங்கள் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி சட்டப்பேரவையில் இரண்டாவது நாளாக ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எச்சரிக்கையை மீறியும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், எதிர்க்கட்சி தலைவர் அதிஷி, முன்னாள் அமைச்சர் கோபால் ராய் உள்பட 21 எம்எல்ஏக்களை வரும் 28-ம் தேதி வரை இடைநீக்கம் செய்து சபாநாயகர் விஜயேந்தர் குப்தா உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து, டெல்லி சட்டப்பேரவை வளாகத்தில் ஆம் ஆத்மி உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அம்பேத்கரின் புகைப்படங்களை கையில் ஏந்திகோஷங்களை எழுப்பினர்.