மகாகும்ப மேளா நாளை நிறைவு பெறும் சூழலில் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
அந்த வகையில் இன்று மாலை முதல் பிரயாக்ராஜ் முழுவதும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவைகளான பால், காய்கறிகள், மருந்து பொருட்கள், எரிபொருள் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு மட்டும் போலீசார் அனுமதி அளித்து உள்ளனர்.
மேலும் மருத்துவர்கள், காவலர்கள், நிர்வாக அதிகாரிகள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி செல்லலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.