மகா கும்ப மேளாவையொட்டி, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் முன்னாள் நார்வே அமைச்சரும் தொழிலதிபருமான எரிக் சோல்ஹிம் புனித நீராடினார்.
பின்னர் எக்ஸ் பக்கத்தில் மகா கும்ப மேளாவை புகழ்ந்த அவர், இயற்கையின் ஒருபகுதியாக மனித குலத்தை இந்திய தத்துவங்கள் கருதுவதாக தெரிவித்தார். மேலும், மகா கும்ப மேளா என்பது வெறும் ஆன்மிக நிகழ்ச்சி மட்டுமன்றி, இயற்கைக்கு நன்றி செலுத்தும் விதமாக கடைப்பிடிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.