மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடன் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் செல்ஃபி எடுத்தது அக்கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருந்த சசி தரூர், பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தை வெகுவாக பாராட்டினார். மேலும் தனக்கு காங்கிரஸில் உரிய அங்கீகாரம் தரவில்லை என்றால் வாய்ப்புகள் திறந்து இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில் சசி தரூர் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் பிரிட்டன் அமைச்சர் ஜோனதான் ரெனால்ட்ஸ் உடன் நெருக்கம் காட்டியது காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.