சென்னை ஐஐடி வளாகத்துக்குள் உருவாக்கப்பட்ட 410 மீட்டர் நீளமுள்ள ஹைபர்லூப் பாதையில் விரைவில் சோதனை ஓட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
சாலை, ரயில், விமானம், நீர்வழி போக்குவரத்து முறையை அடுத்து உலகின் 5-வது போக்குவரத்து முறையாக ஹைபர்லூப் தொழில்நுட்பம் கருதப்படுகிறது.
இந்த முயற்சிக்கு ரயில்வே சார்பில் சென்னை ஐஐடிக்கு நிதியுதவி வழங்கப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.