வெளியுறவு விவகாரத்தில் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
வங்க தேசத்தில் அடக்குமுறைக்கு ஆளாகும் ஹிந்துகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, அண்டை நாட்டு விவகாரங்களில் நீதிமன்றத்தால் எப்படி கருத்து தெரிவிக்க முடியும் என கேள்வி எழுப்பியதுடன், மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.