ரயில் நிலையங்களில் உள்ள இந்தி எழுத்துக்களை திமுகவினர் கருப்பு மை கொண்டு அழித்ததை எதிர்த்து பாஜக சார்பில் காவல் துறையிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை, பொள்ளாச்சி உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கு சென்ற திமுகவினர், பெயர் பலகைகளில் இருந்த இந்தி எழுத்துக்களை கருப்பு மை கொண்டு அழித்தனர். இது தொடர்பாக பாஜக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி தமிழக டிஜிபி உள்ளிட்ட காவல் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.
திமுகவினர் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாக மனுவில் தெரிவித்துள்ள அவர், பொது சொத்தை சேதப்படுத்தும் இத்தகைய செயல் தண்டனைக்குரிய குற்றம் என தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய திமுகவினர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பாஜக வழக்கறிஞர் வலியுறுத்தியுள்ளார்.