ரயில் நிலையங்களில் ‘இந்தி அழிப்பு’ போராட்டத்தை முன்னெடுத்து வரும் திமுக-வினரை கண்டித்து நெல்லையில் பாஜக-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு திமுக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் திமுக-வினரால் ‘இந்தி அழிப்பு’ போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக கடந்த 23-ம் தேதி நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில், மும்மொழி கொள்கைக்கு எதிராக திமுக-வினர் நடத்திய போராட்டத்தின்போது, இந்தி-யில் இருந்த பெயர் பலகை கறுப்பு மை பூசி அழிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வடக்கு மாவட்ட தலைவர் முத்து பலவேசம் தலைமையிலான பாஜக-வினர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த முத்து பலவேசம், மத்திய அரசு அலுவலகங்களில் திமுக-வினர் தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.