விழுப்புரத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து, கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த கீழ்புத்துப்பட்டில் இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாம் அமைந்துள்ளது. அகதிகளாக இலங்கையில் இருந்து வந்த 1500-க்கும் மேற்பட்டோர் இந்த முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த முகாமைச் சேர்ந்த இந்திரன் என்பவர் அங்குள்ள 16 வயது சிறுமி ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்ததுடன், அவரை தாக்கி கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசார் இந்திரனை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
















