பிரயாக் ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் 60 கோடி மக்களுக்கும் மேல் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். கங்கை நதியின் மாசுத்தன்மை குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், கங்கையின் புனிதத் தன்மை குறித்து, பத்மஸ்ரீ விருது பெற்ற அறிவியல் அறிஞர்,(Dr. Ajay Sonkar) டாக்டர் அஜய் சோங்கர் நடத்திய ஆய்வின் முடிவுகளை உத்தரப்பிரதேச அரசு வெளியிட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த பிப்ரவரி 3ம் தேதி, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் மகா கும்பமேளா நடைபெறும் திரிவேணி சங்கமத்தில் ஓடும் நதி நீரின் தூய்மை குறித்து ஒரு அறிக்கை சமர்ப்பித்தது.
அதாவது, கங்கை-யமுனை- நதியில் , நீரின் தரத்தை தீர்மானிக்கும் முக்கிய அளவீடான பிஓடி பரிந்துரைக்கப்பட்ட வரம்பை விட பல மடங்கு அதிகமான கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருந்தது.
பிஓடி என்பது நீரில் இயற்கை கழிவுகளின் அளவு அதிகரிப்பால் நுண்ணுயிர் பெருக்கம் அதிகம் உள்ளதை குறிப்பதாகும். ஒரு லிட்டருக்கு 3 மில்லி கிராமுக்கு குறைவான பிஓடி இருப்பதே குளிப்பதற்கு பாதுகாப்பான அளவாகும்.
பிரயாக் ராஜில் ஜனவரி 13 ஆம் தேதி முதல் நடந்து வரும் மகா கும்ப மேளாவில் , இதுவரை 60 கோடிக்கும் மேல் பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.
தினமும் 1.6 கோடி லிட்டர் அளவில் மனித கழிவுகளும், 24 கோடி லிட்டர் அளவில் பிற கழிவுநீரும் உருவாகும் நிலையில் கங்கை குளிப்பதற்கு பாதுகாப்பானதாக இல்லை என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியிருந்தது.
மேலும், நாளுக்கு நாள் கங்கையில் உள்ள பாக்டீரியாக்களின் செறிவு அதிகரிக்கிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருந்தது.
உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத், கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி, மாநில சட்டமன்றத்தில் இந்த அறிக்கையை முழுமையாக நிராகரித்தார். மேலும், திரிவேணி சங்கமம் பகுதியில் உள்ள நீர் புனித நீராடுவதற்கு மட்டுமின்றி குடிப்பதற்கும் உகந்தது என்று உறுதிபட தெரிவித்திருந்தார்.
மகா கும்ப மேளாவை சீர்குலைக்க அதுகுறித்த தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக எதிர்க்கட்சிகள் மீது முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், கங்கையின் வெவ்வேறு ஐந்து இடங்களிலிருந்து நதிநீர் மாதிரிகளை எடுத்து, ஆய்வு செய்ததில் அதில், பாதிப்பு ஏற்படுத்தும் எந்த ஒரு பாக்டீரியாவும் இல்லை என்று (Dr. Ajay Sonkar) டாக்டர் அஜய் சோங்கர் நிரூபித்துள்ளார்.
ஆய்வுக்காக கொண்டுவந்த கங்கையின் நதி நீரை, பல நாட்கள் வைத்திருந்த போதும்,அந்த நீரில் பாக்டீரியா வளரவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, கங்கை, யமுனை, சரஸ்வதி பாயும் திரிவேணி சங்கமத்தில் குளிப்பதால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் கூறியுள்ள (Dr. Ajay Sonkar) டாக்டர் அஜய் சோங்கர், சுமார் 60 கோடி பக்தர்கள் நீராடிய பிறகும் கூட, கங்கை தன்னைத் தானே சுத்தப் படுத்திக் கொள்ளும் அதி அற்புத சக்தி கொண்டிருப்பதாகவும் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கங்கை நீரில் 1,100 வகையான பாக்டீரியோபேஜ்கள் உள்ளன. அவை பாதிப்பு ஏற்படுத்தும் பிஓடி நுண்ணயிர்களை நீக்குகிறது. அதன் மூலம் கங்கை தன்னை தானே சுத்தப்படுத்துகிறது என்று தனது ஆய்வறிக்கையில் (Dr. Ajay Sonkar) டாக்டர் அஜய் குமார் சோங்கர் விளக்கியுள்ளார்.
உலகின் ஒரே நன்னீர் நதி கங்கை என்பதை (Dr. Ajay Sonkar) டாக்டர் அஜய் குமார் சோங்கரின் அறிவியல் ஆய்வு கட்டுரை உறுதிப்படுத்தியுள்ளது.
கைலாய மலை உலகத்தின் உச்சி எனப்போற்றப் படுகிறது. அங்கே இருக்கிறது மானசரோவர் ஏரி. இந்த இரண்டும், இந்துக்கள் அனைவரும் புனிதமாக மதிக்கும் புண்ணிய இடங்களாகும்.புனிதமாக கருதினாலும், மானசரோவர் ஏரி நீரை யாரும் வீட்டுக்குத் தீர்த்தமாக எடுத்து வருவதில்லை.
ஆனால் காசிக்குச் சென்றால், கங்கை நீரை எடுத்து வருகிறார்கள். பல காலம் தங்கள் வீட்டில் வைத்து பூஜிக்கிறார்கள். பயன் படுத்துகிறார்கள். எத்தனை நாளானாலும் கொண்டுவந்த கங்கை நீர் கெட்டுப் போவதில்லை. இதுவே கங்கை நீரின் மகிமையாகும்.
தன்னை தானே சுத்தம் செய்து கொண்டு, தன்னில் புனித நீராடும் பக்தர்களின் பாவங்களை எல்லாம் போக்கும் கங்கையின் பெருமையை (Dr. Ajay Sonkar) டாக்டர் அஜய் குமார் சோங்கர் அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளார்.