புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், அடுத்த கல்வியாண்டு முதல் 10ஆம் வகுப்புக்கு 2 முறை பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என சிபிஎஸ்சி முடிவு செய்துள்ளது..
டெல்லியில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில், நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் , தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டிலிருந்து 2 முறை பொதுத்தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வரைவு அறிக்கைக்கு சிபிஎஸ்இ ஒப்புதல் அளித்துள்ளதால், மார்ச் 9ஆம் தேதி வரை பொதுமக்கள் தங்களை கருத்துகளை அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி முதற்கட்ட பொதுத்தேர்வு 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 17 முதல் மார்ச் 6 வரையும், 2-ம் கட்ட பொதுத்தேர்வு மே 5 முதல் 20 வரையும் நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.