திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியில் திறக்கப்பட்ட இரண்டாவது நாளே முதல்வர் மருந்தகம் மூடப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
நாட்டறம்பள்ளி பேரூராட்சி பகுதியில் முதல்வர் மருந்தகத்தை, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார் மற்றும் பேரூராட்சி தலைவர் சசிகலா சூரியகுமார் ஆகியோர் குத்து விளக்கெற்றி துவக்கி வைத்தனர்.
துவக்கி வைத்து இரண்டாவது நாளிலே முதல்வர் மருந்தகம் மூடப்பட்டதால் பல்வேறு பகுதிகளில் இருந்து மருந்து வாங்க வந்த பொதுமக்களும், நோயாளிகளும் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் தனியார் மருந்து கடைகளில் மருந்துகளை வாங்கி செல்லவேண்டிய அவலநிலை ஏற்பட்டது.