சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே இருசக்கர வாகனத்தை திருடிய மர்ம நபர்கள், 4 நாட்கள் கழித்து மன்னிப்பு கடிதத்துடன் வாகனத்தை திருப்பி வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
டி.பழையூர் கிராமத்தை சேர்ந்த வீரமணி தனது வீட்டருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். சிறிது நேரம் கழித்து இருசக்கர வாகனம் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், காவல்நிலையத்தில் புகாரளித்தார்.
இருகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில், 4 நாட்கள் கழித்து இருசக்கர வாகனத்தை மீண்டும் வீட்டருகே நிறுத்திவைத்த நபர்கள், மன்னிப்பு கடிதத்தை எழுதிவைத்துவிட்டு தப்பிச்சென்றது காவலர்கள் இடையே நகைப்பை ஏற்படுத்தியது.