மகா சிவராத்திரியை முன்னிட்டு கங்கைகொண்ட சோழபுரத்தில் நாட்டியாஞ்சலி விழா கோலாகலமாக நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உலக பிரசித்தி பெற்ற மாமன்னன் ராஜேந்திரன் சோழனால் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
,இங்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி விழா வெகு விமர்சையாக நடைபெறும். அந்த வகையில் மகா சிவராத்திரி இன்று தொடங்க உள்ள நிலையில், பத்தாம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழுமம் சார்பில் நடைபெற்றது. அதன்படி மங்கல இசையுடன் விழா தொடங்கியது .பின்னர் முக்கிய நிகழ்வான நாட்டியாஞ்சலி நடைபெற்றது.
முதல் நாள் நிகழ்வில் கோயம்புத்தூர், தஞ்சாவூர், கடலூர், பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டம மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான நடன கலை குழுவினர் பங்கேற்று நடனமாடி பக்தர்களை பக்தியில் ஆழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து மகா சிவராத்திரி அன்று விடிய விடிய நாட்டிய அஞ்சலி நடைபெறும் மேலும் சுவாமி மற்றும் அம்பாளுக்கு ஆறு கால அபிஷேகம் நடைபெறும்.