22 பண்டிதர்கள் இணைந்து பில்லி சூனியம் வைத்ததே ICC சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் தோல்வியடைய காரணம் என, அந்நாட்டு ஊடகத்தில் ஒளிபரப்பான விவாத நிகழ்ச்சி பேசுபொருளாகியுள்ளது.
துபாயில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இது தொடர்பாக, பாகிஸ்தான் நாட்டு தொலைக்காட்சி ஒன்றில் ருசிகர விவாதம் நடைபெற்றது.
அதில் 22 பண்டிகர்கள் இணைந்து பில்லி சூனியம் வைத்ததால் பாகிஸ்தான் வீரர்களுக்கு கவனச் சிதறல் ஏற்பட்டதாகவும், இதன் காரணமாகவே இந்தியா வெற்றி பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், போட்டிக்கு ஒருநாள் முன்னரே பண்டிதர்கள் துபாய்க்கு அழைத்து வரப்பட்டதாகவும் ஊடகவியலாளர்கள் குற்றஞ்சாட்டினர். இந்த விவாத நிகழ்ச்சி தொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.