குளித்தலை அருகே அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், குனியமுத்தூரை சேர்ந்த செல்வராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் ஒரத்தநாடு அருகே உள்ள அக்னி வீரனார் கோயிலுக்கு காரில் சென்றுள்ளார். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சென்றபோது எதிரே வந்த அரசு பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், கார் உருக்குலைந்த நிலையில், அதில் பயணம் செய்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சென்ற போலீசார், தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் பேருந்தின் அடியில் சிக்கியிருந்த 5 பேரின் சடலங்களையும் மீட்டனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















