கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே தனியார் சொகுசு பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக மோதிய விபத்தில் 35-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
வேப்பூர் அருகே உள்ள சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில் 3 தனியார் சொகுசு பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றுள்ளன.
அப்போது முன்னாள் சென்ற பேருந்து திடீரென பிரேக் பிடித்ததில், அவற்றின் பின்னே வந்த இரு பேருந்துகளும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதில் 3 பேருந்துகளிலும் பயணித்த 35 பயணிகள் படுகாயமடைந்தனர்.