கன்னியாகுமரி மாவட்ட ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த விசைப்படகு விரிசல் ஏற்பட்டு கடலில் மூழ்கியது.
கடந்த திங்கள்கிழமை முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 20 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களது படகில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது.
நீர் உள்ளே வரத் தொடங்கியதால் விசைப்படகு கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கத் தொடங்கியது. உடனடியாக அங்கு விரைந்த சக மீனவர்கள், மூழ்கும் விசைப்படகில் சிக்கித் தவித்த 20 மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர். மீன்பிடி உபகரணங்களுடன் கூடிய இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள விசைப்படகு நீரில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது.