நாட்டின் விடுதலைக்காகவும் வளர்ச்சிக்காகவும் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த சாவர்க்கரின் தியாகத்தினைப் போற்றி வணங்குவோம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், வீரத்திற்கும், தியாகத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர், அமரர் சாவர்க்கர் நினைவு தினமான இன்று, தமிழக பாஜக சார்பாக சார்பாக அஞ்சலி செலுத்திக் கொள்கிறோம்.
தாய்நாட்டின் விடுதலைக்காகவும் வளர்ச்சிக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த அவரது தியாகத்தினைப் போற்றி வணங்குவோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.