சேலம் மாவட்டம், வீரகனூரில் வியாபாரியிடம் மாமுல்கேட்டு மிரட்டிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் ஆடியோ வைரலான நிலையில், அவர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம், வீரகனூர் காவல் நிலையத்தில் கடந்த 11 மாதங்களாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக கருப்பண்ணன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் இருப்பநத்தத்தைச் சேர்ந்த சந்துக்கடை வியாபாரி செந்தில் என்பவரிடம் மாமுல் கேட்டு செல்போனில் பேசியுள்ளார். கடையை தொடர்ந்து நடத்த 2 ஆயிரத்து 500 ரூபாய் மாமூல் தர வேண்டும் என அவர் கேட்டுள்ளார். இது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் மாமுல்ஆடியோ வைரலானதையடுத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கருப்பண்ணனை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.