தேனி மாவட்டம் வருசநாடு அருகே மலையடிவார தோட்டத்தில் பலத்த காயங்களுடன் 2 விவசாயிகளின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
கோவில்பாறை பகுதியில் உள்ள மலையடிவாரத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளன. இந்நிலையில், வருசநாடு அடுத்த தர்மராஜபுரம் பகுதியை சேர்ந்த கருப்பையா, மணிகண்டன் ஆகியோர் விவசாய தோட்டத்தில் பலத்த காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் சடலங்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விவசாயிகளை வனவிலங்குகள் தாக்கியதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.