திருப்பத்தூர் மாவட்டம், ஜங்காலபுரத்தில் எருது விடும் திருவிழாவைக் காண சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் குவிந்தனர்.
ஜங்காலபுரத்தில் 114-ம் ஆண்டு எருது விடும் திருவிழா நடைபெற்றது. இதில் ஆந்திரா உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. விழாவை நாட்றம்பள்ளி வட்டாட்சியர் தொடங்கி வைத்தார்.
விழாவில் முதலிடத்தை பெற்ற காளையின் உரிமையாளருக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. இந்த திருவிழாவை சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் கண்டு ரசித்தனர்.