உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் மகாசிவராத்திரியையொட்டி ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்காக குவிந்தனர்.
மகாகும்பமேளாவுக்கு சென்று திரும்பும் பக்தர்களும் வருகை தருவதால் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் காசி விஸ்வநாதரை தரிசிக்க வழிநெடுக காத்திருந்த பொதுமக்களின் மீது, ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன.