MH370 மலேசிய விமானம் மர்மமான முறையில் மாயமாகி 11 ஆண்டுகள் நிறைவை ஒட்டி மீண்டும் தேடுதல் வேட்டையை மலேசிய அரசு தொடங்கியுள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு மாதம் 8-ஆம் தேதி 239 பயணிகளுடன், கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பெய்ஜிங் நகருக்கு MH370 விமானம் புறப்பட்டுச் சென்றது.
இந்திய பெருங்கடல் பகுதியை கடக்கும்போது அந்த விமானம் திடீரென மாயமானது. அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதாகவும், அதிலிருந்த அனைவரும் உயிரிழந்ததாகவும் பின்னா் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், விமானம் குறித்து மீண்டும் தேடுதல் வேட்டையை மலேசிய அரசு தொடங்கியுள்ளது