அமெரிக்க அதிபர் டிரம்புடன், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நாளை மறுநாள் சந்திக்கிறார்.
உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் போர் நடந்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
சமீபத்தில் புதினுடன் தொலைபேசியில் பேசி டிரம்ப் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் நாளை மறுநாள் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, டொனால்ட் டிரம்பை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.