அமெரிக்காவில் விமான தரையிரங்கும் போது மற்றொரு விமானம் ஓடுபாதையில் வந்த காட்சி வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் சமீப காலமாக விமான விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், சிகாகோவில் உள்ள ஓடுபாதையில் விமானம் ஒன்று தரையிரங்கி கொண்டிருந்தது.
அப்போது ஓடுபாதையின் குறுக்கே மற்றொரு விமானம் வந்தது. இதனை பார்த்து சுதாரித்து கொண்ட விமானி மீண்டும் விமானத்தை வானை நோக்கி இயக்கினார். இதனால் நல்வாய்ப்பாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.