தஞ்சை பெரிய கோயிலுக்கு சிவன் வேடத்தில் வந்த சிறுவனை பக்தர்கள் பரவசத்துடன் கண்டு மகிழ்ந்தனர்.
தஞ்சை பெரிய கோயிலில் மாசி மாத பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரியை முன்னிட்டு நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
அப்போது, கர்நாடகாவைச் சேர்ந்த சிறுவன் ஒரு கையில் உடுக்கை, மற்றொரு கையில் சூலம் ஏந்தி சிவபெருமான் வேடத்தில் கோயில் பிரகாரத்தை வலம் வந்தார். சிறுவனை பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.