மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரே உள்ள சர்க்கரை குளத்தில் லட்ச தீபங்கள் ஏற்றி பொதுமக்கள் வழிபட்டனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரே உள்ள சர்க்கரை குளத்தில் லட்ச தீபங்கள் ஏற்றி வழிபட்டனர்.