விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மாசி களரி திருவிழாவை முன்னிட்டு விடிய விடிய ஆண்கள் மட்டும் பங்கேற்ற விழா நடைபெற்றது.
ஸ்ரீ வெங்கல கருப்பசாமி, ஸ்ரீ சங்கிலி கருப்பசாமி சக்தி பூஜையை ஒட்டி கிடாய்கள், சேவல்கள் பலியிடப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் நடுநிசியில் வெங்களா கருப்பசாமி, சங்கிலி கருப்பசாமி கையில் அரிவாளுடன் வேட்டைக்கு சென்று ஆக்ரோசமாக வந்து பின்னர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.