பண்ருட்டி அருகே அதிகாரிகள் ஆக்கிரமிப்பினை அகற்ற வந்த போது முதியவர் ஒருவர் தீக்குளிக்க முயன்றார்.
எஸ்.ஏரிப்பாளையம் மெயின் ரோட்டில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டிருந்தாகவும், இரண்டு வருடங்களுக்கு மேலாக கால அவகாசம் கொடுத்தும் காலி செய்யாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவின்படி நெடுஞ்சாலைத்துறையினர், பண்ருட்டி வட்டாட்சியர் மற்றும் போலீசார் ஆக்கிரமிப்பினை அகற்ற சென்றனர். இதற்கு அங்கிருந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திடீரென முதியவர் ஒருவர் உடலில் மண்ணெணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி முதியவரிடமிருந்து மண்ணெண்ணை கேனை அப்புறப்படுத்தினர்.