திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயிலில் நடிகர்கள் பிரபுதேவா, மோகன் பாபு சாமி தரிசனம் செய்தனர்.
தரிசனத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரபுதேவா, கண்ணப்ப நாயனார் வரலாற்று கதை கண்ணப்பா என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ளதாக தெரிவித்தார்.
இப்படத்தை நடிகர் மோகன் பாபு தயாரிக்கிறார் என்றும், விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தை பார்ப்பதன் மூலம் சிவபெருமான் மீது கண்ணப்ப நாயனார் வைத்துள்ள பக்தியை உணர முடியும் என்றார்.