7 மணி நேர காத்திருப்புக்கு பின் பழைய பாதை வழியாக திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு காவல் துறை அனுமதி வழங்கியது.
மகா சிவராத்திரியையொட்டி திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு பழைய பாதையில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, போலிசாரிடம் பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் வழக்கத்தை மாற்றக்கூடாது என்றும், பழைய பாதை வழியாக காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அனுமதி வழங்க வேண்டும் கோரிக்கை விடுத்தனர்.
எனினும் செவி சாய்க்காத மாவட்ட நிர்வாகம், சுமார் 7 மணி நேரம் காத்திருப்புக்கு பின், காலை 6 மணி முதல் பழைய பாதை வழியாக காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கியது.