தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஹாலோ பிளாக் கல் தயாரிக்கும் ஆலைக்குள் புகுந்த காட்டு யானைகள், அங்குள்ள தென்னை மரங்களை சேதப்படுத்தின.
தென்காசி அருகே மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிக்கு அருகில் உள்ள பங்களா குடியிருப்பு பகுதியில் முருகேஷ் என்பவருக்கு சொந்தமான ஹாலோ பிளாக் கல் தயாரிக்கும் ஆலை உள்ளது.
இந்த ஆலைக்குள் புகுந்த காட்டு யானைகள் கூட்டம் அங்குள்ள தென்னை, குடிநீர் குழாய்களை சேதப்படுத்தின.இதுதொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.இதனால் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.