கோவை வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மஹா சிவராத்திரி விழாவில் காளைக்கு மாலை அணிவித்து, அதன் முகத்தினை ஜக்கி வாசுதேவ் வருடி கொடுத்தார்.
பின்னர் நடைபெற்ற ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில், சத்குருவின் பேச்சை கேட்டு பக்தி பரவசமடைந்த பெண் பக்தர்கள் கண்ணீர் வடித்தனர்.
இதனைத்தொடர்ந்து ஆண்களும் பெண்களும் தீ பிழம்புகளுடன் அனல் பறக்க நடனமாடினர்.இதனை ஜக்கி வாசுதேவ் உள்ளிட்டோர் வியப்புடன் பார்த்து ரசித்தனர்.
மஹா சிவராத்திரி விழாவில் பறை, தவில் உள்ளிட்ட இசைக்கருவிகள் இசைக்கப்பட்டன. அப்போது ஜக்கி வாசுதேவ் மற்றும் கூடியிருந்த மக்கள் மெய் மறந்து நடனமாடினர்.
ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மஹா சிவராத்திரி விழாவில் ஜெர்மன் பாடகி ஒருவர் தமிழில் பேசினார். அப்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கைத்தட்டி பாராட்டினர்.
மஹா சிவராத்திரி நிகழ்வின்போது ஜக்கி வாசுதேவ், பக்தி மிகுதியால் கண்கலங்கிய தனது மகளை அழைத்து சமாதானப்படுத்தி நடனமாட வைத்தார்.