திருச்சி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த செவிலியர் பயிற்சி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய கைதி ஒருவர் காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்று வருகிறார். அந்த கைதியின் பாதுகாப்புக்காக பெரம்பலூர் மாவட்ட காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த இளம்ராஜா என்பவர் பணியில் ஈடுபட்டார்.
இந்நிலையில், மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியர் பயிற்சி மாணவிக்கு இளம்ராஜா பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக செவிலியர் மாணவி அளித்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், காவலர் இளம்ராஜாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட காவலர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.