நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக குண்டு வெடிப்பு தொடர்பான செய்திகள் வெளிவருவதில்லை என சத்குரு ஜக்கி வாசுதேவ் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் பேசிய அவர், இந்தியாவில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவித்தார். முந்தைய ஆட்சியில் அவ்வப்போது குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாகவும், பாதுகாப்பு படையை முறையாக வழிநடத்தும் அதிகாரிகளுக்கு அவர் நன்றி கூறினார்.
2026-ல் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமித்ஷா கூறியுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்து வரலாற்று பிழைகள் சரிசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.