மாசி மாத அமாவாசையை ஒட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமானோர் புனித நீராடினர்.
மாசி அமாவாசையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். அப்போது பக்தர்கள் இறந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தனர்.
அதன் பின் அக்னி தீர்த்த கடலில் சிவ சிவ என கோஷமிட்டப்படி பக்தர்கள் புனித நீராடினர்.மேலும், கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடி அம்பாளை தரிசித்தனர்.