நாகையில் சிபிசிஎல் நிறுவனத்தின் விரிவாக்க பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாகை மாவட்டம், பனங்குடியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தின் விரிவாக்க பணிகளுக்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.
கடந்தாண்டு மே 11ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது மூன்று மாதத்தில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது வரை இழப்பீடு தொகை வழங்காததால், விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
ஓராண்டை நெருங்கும் நிலையில் இழப்பீடு தொகை வழங்காததால் தமிழக அரசை கண்டித்து கிராம மக்கள் போராட்டடத்தில் ஈடுபட்டுள்ளனர்.