கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக நிர்வாகி ஷங்கர் சிபிசிஐடி விசாரணைக்கு இன்று நேரில் ஆஜரானார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு பங்களாவில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கொடநாடு பங்களாவின் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் தற்கொலை தொடர்பாக அதிமுக நிர்வாகி ஷங்கர், கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார்.
கொடநாடு மேலாளர் நடராஜனிடம் மீண்டும் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில் அவர் ஆஜராகவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து விரைவில் அவருக்கும் சம்மன் வழங்கி நேரில் அழைத்து விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.