திருப்பத்தூரில் தனியார் பள்ளியைச் சேர்ந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டி தங்கள் பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்து ஆசிர்வாதம் பெற்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறவேண்டி பள்ளி நிர்வாகம் சார்பில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
பள்ளி வளாகத்தில் யாகசாலை அமைத்து மாணவர்களுக்காக பல்வேறு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தங்கள் பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்த மாணவர்கள் அவர்களிடம் ஆசிர்வாதம் பெற்றனர்.
தொடர்ந்து பள்ளி நிர்வாகம் சார்பில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு பேனாவும், சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு தங்க நாணயமும் பரிசாக வழங்கப்பட்டன.