அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப், மார்ச் 13ம் தேதிக்குள் தேவையற்ற அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டார்.
அரசு ஊழியர்களில் பலர் வேலையை செய்யாமல் ஏமாற்றிக் கொண்டிருப்பதாகவும், இதனால் அரசுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்படுவதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
ஒவ்வொரு அரசு துறையும், தங்கள் ஊழியர்களில் எத்தனை பேரை பணி நீக்கம் செய்ய முடியும் என்ற தகவலை அறிக்கையாக சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார்.
டிரம்ப் பதவியேற்றதில் இருந்து, அரசு ஊழியர்களில் 1 லட்சத்திற்கு அதிகமானவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.