காசாவை நவீன நகரமாக மாற்றியது போல் ஏ.ஐ.,யால் உருவாக்கப்பட்ட வீடியோவை அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிர்ந்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.
‘காசா – 2025’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், போரால் வீட்டை இழந்து சாலையில் திரியும் சிறுமி உள்ளார். அதன் பின் டிரம்பின் காசா என்று வேறு காட்சிகள் விரிகின்றன.
அதில் பளபளக்கும் சாலைகள், சொகுசு கார்கள், சொகுசு ஹோட்டல்கள், டிரம்பின் ஆளுயுர தங்க நிற சிலை உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.