ராமநாதபுரத்தில் 11-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆங்கில ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திருப்புல்லாணி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றியவர் ராம் பிரகாஷ், இவர், 11-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆங்கில ஆசிரியர் ராம் பிரகாஷை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.