பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா வைர வேலைப்பாடுகளுடன் கூடிய ஆடையை அணிந்து தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை ஊர்வசி ரவுத்தேலா, கடந்த 2013-ம் ஆண்டு அனில் சர்மா இயக்கத்தில் வெளியான ‘சிங் சாப் தி கிரேட்’ என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
தமிழில் இவர் ‘லெஜண்ட்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஊர்வசி தனது 31வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
அந்த கொண்டாட்டத்தின்போது அவர் வைர வேலைப்பாடுகளுடன் கூடிய ஆடையை அணிந்திருந்தார். இது தொடர்பான வீடியோ வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.